About us – Tamil

மாஷா – வின் ரிச்வே மார்க் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்கள்…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்த காலம் சென்றுவிட்டது. சமையல் எண்ணெய்கள் என்று நாம் கடைவீதியிலிருந்து வாங்கும் எண்ணெய்கள் சமையல் எண்ணெய்கள்தானா? ஆனால், நாம் அதன் விபரீதம் அறியாமல் மலிவான விலையில் பல கலப்பட எண்ணெய்களை பயன்படுத்தி நோயின் பிடியில் அகப்பட்டு நம் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் இழந்துவிடுகின்றோம்.

  • நாம் உண்ணும்  உணவே நம் உடலின் ஆரோக்கியத்தை  தீர்மானிக்கின்றது.
  • உடலின் ஆரோக்கியமானது உணவின்தரத்தைக்  கொண்டே  அமைகின்றது.
  • உணவின் தரமானது நாம் பயன்படுத்தும்எண்ணெயை பொறுத்தே அமைகின்றது. ஏனென்றால், நம் உணவில் எண்ணெய் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

மாஷா குழுமத்தின் நோக்கம்:

கலப்படம் நிறைந்த உணவு பழகவழக்கத்தைகொண்டு  வாழும்  தலைமுறையின் மாற்றத்திற்காகவும்,  வளரும்  தலைமுரையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் களமிறங்கியுள்ளது, மாஷா நிறுவனம்.

எங்கள் சொந்த தயாரிப்புகளான நல்லெண்ணெய், நிலக்கடலை  எண்ணெய்  மற்றும் தேங்காய் எண்ணெய் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான எள், கடலை  மற்றும் கொப்பரை கொண்டு முற்றிலும் சுகாதாரமான முறையில்  இரசாயன எண்ணெய்கள், சுவையூட்டுகள், போன்றவைகலக்கப்படாமல் மக்களின் அரோக்கியத்தைமட்டுமே கருத்தில் கொண்டு  பாரம்பரிய  நாட்டு வாகை மரச்செக்கில் தயாரிக்கப்பட்டவை.

ஆரோக்கிய தரும் மரச்செக்கு எண்ணெய்கள்:

மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிகவெப்பத்தை வெளியிடுவதில்லை. மேலும் மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துகள் அப்படியே இருக்கும். அதிலுள்ள இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீஷியம், செம்பு, கால்சியம் போன்ற சத்துகள் நம் எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தருவதோடு தேய்மானத்தைத் தடுக்கக் கூடியவை.

மாஷாவின் ரிச்வே மார்க் மரச்செக்கு எண்ணெய்கள்…

  • 100% இயற்கையானது, தூய்மையானது.தரம், மணம் குறையாமல் தயாரிக்கப்படுகிறது.
  • சமையலில் சுவையை தூண்டவல்லது.
  • மற்ற இரசாயன எண்ணெய்கள் (Chemical Oil) கலக்கப்படாதது.
  • உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும்.
  • ஆரோக்கியத்தைக் கூட்டும்; மருத்துவமனையைத் தூரமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

நாட்டுச் சர்க்கரை:   

நாட்டுச் சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது உடலுக்கு ஆரோக்கியமானது. முற்றிலும்இயர்க்கையானது.

வேர்கடலை ஃபட்ஜ், கிரீம்:

இது வேர்கடலை மற்றும் வைட்டமின் நிரைந்த கடலையின் தோல் நீக்கப்படாமல், நாட்டுச் சர்க்கரை மற்றும் மரச்செக்கு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்டதால், நமக்கும் குழந்தைகளுக்கும்சத்தானது; ஆரோக்கியமானது. இதில்   வெள்ளை    சீனி   மற்றும்இரசாயன எண்ணெய் (ளீஜுளதுஷ்உழியி நுஷ்யி)   சேர்க்கப்படவில்லை.

தேன் நெல்லி:

உடலுக்கு மிகவும் சக்தியை தரக்கூடிய தேன் நெல்லி எவ்வித இரசாயனமுமில்லாமல்   சொந்தமாகபாடம் செய்து ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டது.

மூலிகை கூந்தல் எண்ணெய்:

நாம் இன்று எதிர்கொல்லும் முடிஉதிர்தல் மற்றும் தலையில் ஏற்படும்பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும்வகையில்,   இயற்கையான மூளப்பொருட்களைக்  கொண்டு தயாரிக்கப்பட்டது.முடி உதிர்வதை தடுக்கும்! கூந்தல் கருமையாக வளர உதவும்!! பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்!!!

தேங்காய் எண்ணெய் சோப்பு மற்றும் குப்பைமேனி சோப்பு:

இது அரிப்பு, வேர்க்குரு, பரு, படர்தாமரை, சொரியாஸிஸ்,கரும்புள்ளிகள் மற்றும் பல தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணி. மேலும், உங்கள் சருமத்தை பொலிவாகவைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் நோய் இல்லாதவர்கள் பயன்படுத்துவது சருமத்திற்கு இதமானது.  தேங்காய்  எண்ணெயின்  கொழுப்பு இல்லாமல் மற்ற கொழுப்பு வகையிலிருந்து தயாரான சோப்பை பயன்படுத்துவதால் வியர்வை துவாரம் அடைப்பட்டு கழிவுகள் தேங்கி பல தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் வாசனைக்காக எந்த இரசாயன Perfume and Fragrance (Chemical) எண்ணெய்களும் சேர்க்கப்படவில்லை.

இதில் சருமத்திற்கு நன்மை தரக்கூடிய (Essential Oil) தாவரங்கள், மரங்களின் மலர்கள் மற்றும் வேர்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாசனை எண்ணெய்கள் மற்றும் குப்பைமேனி சேர்க்கப்படுகின்றன. 

துணிகளுக்கு பாதுகாப்பான சோப்புத்தூள்:

இது தரமான மூலப்பொருட்களை கொண்டுதயாரிக்கப்பட்டது.  இதில் ஆபத்தான யூரியா, காஸ்டிக் ஸோடா மற்றும்எடையை கூட்டும் (டோலொமைட்) சேர்க்காதது.அதனால் துணிகளுக்கு பாதுகாப்பானது. மேலும், கை மற்றும் மெஷினில் துவைப்பதற்கு ஏற்றது. கறைகளை நீக்கி உங்கள் துணிகளை பிரகாசமாக்குகிறது.

முதலில் தரம்! பிறகு பணம்!!

எங்களின் அனைத்து (Richway Brand) தயாரிப்புகள், மிகவும் சுத்தமாகவும், தரமாகவும் உயர்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மாஷாவின் ரிச்வே தயாரிப்புகள் ஒருமுறை வாங்கி பயன்படுத்திப் பாருங்கள் அதன் உண்மை தன்மை புரியும். திருப்தி இல்லையெனில் விற்ற பொருள் திரும்ப பெறப்படும்! – நிறுவனர், மாஷா குழுமம்

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping